பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வீரர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி

Added : நவ 30, 2019
Advertisement

ஈரோடு: மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கு, பாம்பு பிடித்தல், தேன் கூடுகளை அகற்றுதல் குறித்து, ஈரோட்டில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மேற்கு மண்டல இணை இயக்குனர் விஜயசேகர் பேசியதாவது: தீயணைப்பு நிலையத்துக்கு ஆண்டுதோறும், பாம்புகள் பிடிக்க, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்பு வருகிறது. தேன் கூடுகள் அகற்றவும், அழைப்புகள் வருகின்றன. அழைப்புகளின்படி, பாம்புகளை பிடித்து வனத்தில் விடுகிறோம். ஆனால், பாம்புகளை பிடிக்க வனத்துறையினர் ஆட்சேபணை தெரிவிக்கின்றனர். எனினும் பாம்பு பிடிப்பது, தேன் கூடுகளை அகற்றுவது தொடர்பாக, முதன் முதலாக இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக ஒவ்வொரு மண்டலத்திலும் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X