தேசிய மல்யுத்த போட்டி: தங்கம் வென்று அசத்திய அரசு பள்ளி மாணவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மல்யுத்த போட்டி: தங்கம் வென்று அசத்திய அரசு பள்ளி மாணவி

Added : நவ 30, 2019
Share
ஈரோடு: தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில், தங்கப் பதக்கம் வென்று வந்த, அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய டிரடீஷனல் ரெஸ்லிங் அமைப்பு சார்பில், எட்டாவது தேசிய அளவிலான மல்யுத்த போட்டி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் கடந்த, 21முதல், 24 வரை நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 878 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து, 26 பேர் பங்கேற்றனர்.

ஈரோடு: தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில், தங்கப் பதக்கம் வென்று வந்த, அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய டிரடீஷனல் ரெஸ்லிங் அமைப்பு சார்பில், எட்டாவது தேசிய அளவிலான மல்யுத்த போட்டி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் கடந்த, 21முதல், 24 வரை நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 878 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து, 26 பேர் பங்கேற்றனர். தமிழகத்துக்கு மொத்தம் நான்கு தங்கப்பதக்கம், ஏழு வெள்ளி, ஒன்பது வெண்கலம் கிடைத்தது. அதில், ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த, நான்காம் வகுப்பு மாணவி திவ்யபாரதி, 11 வயதுக்குட்பட்டோர் பிரிவு, மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். ஈரோடுக்கு பெருமை சேர்த்த திவ்யபாரதியை, தலைமையாசிரியை சுமதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X