பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : நவ 30, 2019
Advertisement

ஓசூர்: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை, தொழிலாளர்கள் அதிகமுள்ள ஓசூரில் அமைக்க வேண்டும்,'' என, முன்னாள் காங்.,- எம்.எல்.ஏ., மனோகரன் கூறினார்.
ஓசூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க ஏற்பாடுகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில் மலை கிராமம், குக்கிராமங்கள் அதிகமாக உள்ளன. ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். எனவே, அரசு அறிவித்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை, ஓசூரில் அமைக்க வேண்டும். ஓசூர் பழைய பஸ் ஸ்டாண்ட் இருந்த இடத்தில், 20 ஏக்கர் நிலம் உள்ளது. ஹட்கோ ஸ்டேஷன் பின்புறம் மற்றும் அந்திவாடி விளையாட்டு மைதானம், சிப்காட் பகுதியில் அதிகளவு நிலம் உள்ளது. போச்சம்பள்ளிக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கொண்டு செல்ல, சிலர் அரசியல் செய்து வருகின்றனர். கடந்த, 2013 ஏப்., 1 ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மூலம் அறிவிக்கப்பட்ட போச்சம்பள்ளி, அஞ்செட்டி ஒன்றிய நிலை என்னவென்று தெரியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக அரசின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. ஓசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போதும், சாலை வசதியில்லை. போதுமான போலீசார் பணியில் இல்லை. ஓசூரில் நடந்த அரசு விழாவிற்கு, எம்.எல்.ஏ.,க்கு கூட அழைப்பில்லை. கொடியாளம் அணையில் இருந்து, பல கோடியில் ரூபாயில் தண்ணீர் எடுத்து, ஏரிகளுக்கு நிரப்புவதாக கூறுவது, என்ன திட்டம் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X