சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் கடத்த முயன்ற போது பறிமுதல்

Added : நவ 30, 2019
Advertisement

ஓசூர்: ஓசூரில் இருந்து, வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற, தடை செய்யப்பட்ட, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
ஓசூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களையொட்டி, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள், பண்ணை குட்டைகள் மூலம் வளர்க்கப்படுகின்றன. இவற்றை இரவில் பிடித்து, லாரிகள் மூலம் கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். ஓசூர் அடுத்த தொடுதேப்பள்ளி கிராமத்திற்கு அருகே இருந்து, ஆப்ரிக்கன் வகை கெளுத்தி மீன்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய எடுத்து செல்லப்படுவதாக, நேற்று முன்தினம் இரவு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பத்தலப்பள்ளி வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட மீன்வளத்துறை சார் ஆய்வாளர் முருகேசனிடம் ஒப்படைத்தனர். பேரண்டப்பள்ளி வனப்பகுதியை ஒட்டிய காலி இடத்தில், குழி தோண்டி மீன்கள் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X