சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: கணவன், மாமியாருக்கு 8 ஆண்டு சிறை

Added : நவ 30, 2019
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வரதட்சணை கேட்டு, மனைவியை சித்ரவதை மற்றும் கொடுமைப்படுத்திய கணவன், மாமியாருக்கு தலா, எட்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஓசூர், சின்ன எலசகிரி கெம்பேகவுடா சர்க்கிளை சேர்ந்த ராஜா, 33, தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுவேதா, 27. திருமணமானதில் இருந்தே சுவேதாவை வரதட்சணை கேட்டு, கணவர் துன்புறுத்தி

கிருஷ்ணகிரி: வரதட்சணை கேட்டு, மனைவியை சித்ரவதை மற்றும் கொடுமைப்படுத்திய கணவன், மாமியாருக்கு தலா, எட்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஓசூர், சின்ன எலசகிரி கெம்பேகவுடா சர்க்கிளை சேர்ந்த ராஜா, 33, தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுவேதா, 27. திருமணமானதில் இருந்தே சுவேதாவை வரதட்சணை கேட்டு, கணவர் துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 2015 ஏப்.,5 ல் ராஜா மற்றும் அவரது தாய் கோவிலியம்மா, 50, இருவரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு, சுவேதாவை அடித்து துண்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, சிப்காட் போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி வழக்கை விசாரித்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ராஜா, மாமியார் கோவிலியம்மா ஆகியோருக்கு தலா, எட்டு ஆண்டு சிறை தண்டனை, தலா, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X