சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் பெயரை சொல்லி ரூ.40 லட்சம் மோசடி? மாவட்ட பா.ஜ., மகளிர் அணி தலைவி மீது புகார்

Added : நவ 30, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: பிரதமர் மோடியின் பெயரை சொல்லி, 40 லட்சம் ரூபாய் ஏமாற்றிய, மாவட்ட பா.ஜ., மகளிர் அணி தலைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த உத்தமன்கொட்டாயை சேர்ந்த, 15 பேர் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மிட்டஅள்ளி பஞ்., திரவுபதியம்மன் கோவில் கொட்டாயை சேர்ந்தவர், மாவட்ட பா.ஜ., மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, 35. அவரது கணவர் தருமன், 37, குரும்பட்டியை சேர்ந்த அன்னேஜ் ஆகிய மூவரும், எங்களிடம், பா.ஜ.,வில் உறுப்பினராக சேர்ந்தால், மோடியிடம் இருந்து கறுப்பு பணத்தை ஒவ்வொருவருக்கும், தலா, ஆறு லட்சம் ரூபாய் பெற்று தருவதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு வங்கி கணக்கு துவங்க, தலா, 6,000 ரூபாய், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பழைய வங்கிக் கணக்கு பாஸ்புக் நகல், 24 போட்டோ ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்றனர். அதை நம்பி நாங்களும், பணம் உள்ளிட்ட பிற ஆவணங்களை கொடுத்தோம். ஆனால், இன்று வரை எங்களுக்கு வங்கி கணக்கு துவங்கவில்லை. பணமும் வரவில்லை. கொடுத்த பணத்தை கேட்ட போது, கறுப்பு பணம் வாங்கித்தர நாங்கள் தலா, 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். மீதிப்பணம் தலா, 29 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகின்றனர். இதே போல், குரும்பட்டி, மிட்டஅள்ளி, கால்வேஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 300 பேரிடமும், ஆலப்பட்டியில் வசிக்கும் மங்கை என்பவர் மூலம், 400 பேரிடமும், 40 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளனர். எனவே, பிரதமர் மோடியின் பெயரை சொல்லி ஏமாற்றிய மூன்று பேர் மீது, நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என் மீது பொய் புகார்: இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயலட்சுமி, நேற்று மாலை எஸ்.பி., அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: என் மீது களங்கம் விளைவிக்க, 6,000 ரூபாயை பெற்றுக் கொண்டு, ஆறு லட்சம் ரூபாய் தருவேன் என்று வாக்குறுதி அளித்ததாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சின்னசாமி, செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர், அவர்களை துண்டிவிட்டு என் மீது பொய் புகார் அளித்துள்ளனர். அவர்களை கட்சியில் இருந்து நீக்கியதற்கு, நான் தான் காரணம் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது பொய் புகார் கொடுக்க வைத்துள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X