பொது செய்தி

தமிழ்நாடு

நிர்ணயித்த தடங்களில் பஸ்களை இயக்காமல் சென்றால் டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை பாயும்

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: 'போக்குவரத்துக்கழகத்தில் நிர்ணயித்த வழித்தடங்களில், பஸ்களை இயக்காமல், 'கட்' செய்து, பணியில் ஒழுங்கீனமாக நடக்கும் டிரைவர், கண்டக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்'என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக்கழக, எட்டு கோட்டத்தில், 321 பணிமனையில், 22 ஆயிரத்து, 555 பஸ்கள் பராமரிக்கப்பட்டு, 20 ஆயிரத்து, 890 தடங்களில் இயக்கப்படுகின்றன. பஸ் இயக்கம், பராமரிப்பு பணிக்கு, 1.31 லட்சம் தொழிலாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், பல்வேறு காரணங்களால், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் தொடர்வதில்லை. மற்ற, 71 ஆயிரம் தொழிலாளர்கள் மூலம், அதிகாரிகள் வேறு வழியின்றி, பஸ்களை இயக்கி வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறையால், ஊழியர்களுக்கு வார, மாத, மருத்துவ உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளை எடுக்க, அந்தந்த கோட்ட, பணிமனை கிளை மேலாளர்கள் தடை விதித்து, தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துகின்றனர். பணி பளுவால், உடல்நிலை சரியில்லை, போக்குவரத்து நெரிசல் காரணம் எனக்கூறி, பல்வேறு வழித்தடங்களில் பஸ்களின் இயக்கம், 'கட்' செய்யப்படுவதாக புகார் குவிந்தது. இதையடுத்து, வழித்தடங்களை, 'கட்' செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கோவை கோட்டம், கருமத்தம்பட்டி கிளையில், 'முதல் நடையிலேயே வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் எனக்கூறி, பஸ்களின் இயக்கத்தை, 'கட்' செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, கிளை மேலாளர், நோட்டீஸ் போர்டில், சுற்றறிக்கை ஒட்டியுள்ளார். அதேபோல், கோவை கோட்டம், ஈரோடு மண்டலம், ஈரோடு கிளை 1 பணிமனை டிரைவர் ஆறுமுகத்துக்கு, ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'கடந்த ஜூலையில், பஸ்சை இயக்க, 234 லிட்டர் டீசல் கூடுதலாக பயன்படுத்தி, நிர்வாகத்துக்கு, 15 ஆயிரத்து, 729 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் மையத்தில், தேவையான பயிற்சியளித்தும், பஸ் இயக்கும் முறையை கடைப்பிடிக்காததால், உங்கள் மீது, ஒழுங்கீன நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது. அதனால், இதுகுறித்து, மூன்று நாளில் உரிய பதிலளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X