தமிழ்நாடு

பொங்கலுக்கு எதிர்பார்த்த 'ஆர்டர்' இல்லை: வெள்ளி ஆபரண உற்பத்தியாளர்கள் தவிப்பு

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: பொங்கல் பண்டிகைக்கு, வடமாநிலம், தமிழக முக்கிய நகரங்களில், வெள்ளி ஆபரண பொருட்களின் ஆர்டர் எதிர்பார்த்த அளவு இல்லாததால், வெள்ளி பட்டறை உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.
சேலத்தில், செவ்வாய்ப்பேட்டை, மணியனூர், அன்னதானப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, கொண்டலாம்பட்டி உள்பட, 80 இடங்கள், புறநகரில், 50க்கும் மேற்பட்ட இடங்களில், 10 ஆயிரத்து, 550 பட்டறைகளில், 1.50 லட்சம் தொழிலாளர்கள், வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். தினமும், 50 டன் வரை, தீபாவளி, பொங்கல், கேரளாவின் ஓணம் பண்டிகைகளின்போது, 100 டன் வரை, வெள்ளி ஆபரண பொருட்கள் தயாரித்து, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தின் கோலாப்பூர், ஊஞ்சா, ஆந்திரா, தமிழகத்தின் மதுரை, நெல்லை, தஞ்சாவூருக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். கடந்த அக்டோபரில் கொண்டாடிய தீபாவளிக்கு, வெளி மாநிலம், மாவட்டங்களில், எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கவில்லை. இது, பொங்கல் பண்டிகையில் சரியாகும் என, பட்டறை உரிமையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பொங்கல், மகர சங்கராந்தி ஆகியவை, வரும் ஜன., 13ல் தொடங்கி, 17 வரை, கொண்டாடவுள்ள நிலையில், எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கவில்லை.

கடந்த, 2018 பொங்கல் பண்டிகைக்கு, 2017 நவம்பரில், 400 டன், டிசம்பரில், 500 டன் ஆர்டர் கிடைத்தது. நடப்பாண்டு நவம்பரில், 100 டன் மட்டும் ஆர்டர் வந்துள்ள நிலையில், வியாபாரிகளும் ஆர்டர் கொடுக்க தயங்குகின்றனர். இதனால், சேலத்தில், வெள்ளி ஆபரண உற்பத்தியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட பட்டறைகள், தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், திருப்பூர், கோவையிலுள்ள, கார்மென்ட்ஸ்களுக்கு படையெடுத்துள்ளதாக, பட்டறை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கடந்த ஜூலை, ஆகஸ்டில், கேரளாவின் ஓணம் பண்டிகைக்கு எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கவில்லை. அதேநிலை, தீபாவளியின்போது தொடர்ந்தது. பொங்கலுக்கும், எதிர்பார்த்த ஆர்டர் இல்லாதது, இத்தொழிலில் நசிவை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில், இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் வந்துள்ளதால், சேலத்தில் கைவண்ணத்தில் தயாரிக்கப்படும் கொலுசு விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது. இயந்திர கொலுசுகளை, குறைந்தபட்சம், 30 கிராம் முதல் தயாரிக்கலாம். கைவண்ணத்தில், 70 கிராமுக்கு மேல் தான் தயாரிக்கமுடியும். இதனால், இந்த கொலுசை விட, இயந்திர கொலுசு விலை குறைவாக உள்ளது. அதனால்தான், ஆர்டரில் சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X