பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : நவ 30, 2019
Advertisement

கூடுதல் பஸ் வசதி தேவை: எலச்சிபாளையம் ஒன்றியம், பெரிய மணலியிலிருந்து வையப்பமலை, வேலகவுண்டம்பட்டி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த பஸ்களே சென்று வருகின்றன. காலை, மாலையில் நெரிசல் காணப்படுவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்கினால், மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த பயனடைவர்.

- என்.வேலு, பெரியமணலி.

மின்மாற்றி அருகே குப்பை குவிப்பு: குமாரபாளையம், நாராயண நகர் எல்லை மாரியம்மான் கோவில் பின்புற வீதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்கு குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகவே இந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டியது அவசியம்.

- ஆர்.பிரகாஷ், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X