குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, காவேரி நகர் சக்தி விநாயகர், புது மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று துவங்கியது. காலை, 10:00 மணியளவில் பவானி கூடுதுறை ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க, யானை, குதிரைகள், ஒட்டகங்கள் பங்கேற்க தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. இன்று, யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது. நாளை காலை, 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE