பொது செய்தி

தமிழ்நாடு

சணல் நார் பைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Added : நவ 30, 2019
Advertisement

நாமக்கல்: 'இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், சணல் நார் பைகள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என, இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பயிற்சியானது, வரும், 6ல் துவங்கி, 13 வேலைநாள்கள் நடைபெறவுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 35 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி. 18 - 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், உணவு இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்களை, நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்திற்கு, வரும், 5க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். விபரங்களுக்கு, 04286 221004, 96989 96424, 8825908170 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X