பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணங்கள் பாதுகாப்பு: எஸ்.பி., வேண்டுகோள்

Added : நவ 30, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வீடு, நிலம், பவர் பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை நகல் எடுக்க கடைகளுக்குச் செல்லும் போது காணாமல் போனதாக புகார்கள் வருகின்றன. ஆவணங்களை நகல் எடுக்கச் செல்லும்போது அவற்றை மொபைல் போன் மூலம் போட்டோ எடுத்தும், ஸ்கேன் செய்து மின்னஞ்சல்களில் சேமித்தும், பென் டிரைவ் மற்றும் 'சிடி'க்களில் பதிவு செய்து பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் நகல் எடுக்கச் செல்லும் கடைகளிலே வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதுபோன்ற செயல்களை தவிர்க்கும் பொருட்டு வயதானவர்களிடம் முக்கிய ஆவணங்களை கொடுத்தனுப்புவதை தவிர்க்க வேண்டும் அல்லது தாங்களும் அவர்களுடன் செல்ல வேண்டும். ஆவணங்களை முன், பின் தெரியாதவர்களிடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நகல் எடுக்க கொடுத்த ஆவணங்களை திரும்ப பெறும்போது தாங்கள் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என அங்கேயே சரிபார்த்து எடுத்து வரவேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களே ஆவணங்களை அடமானம் வைத்துவிட்டு அதன்மீது பொய்யாக புகார் ஏதேனும் கொடுக்கப்பட்டதாக தெரிந்தால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, எஸ்.பி., அருளரசு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X