லண்டன் கத்திக்குத்தில் ஈடுபட்டவன்: பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (65)
Advertisement

லண்டன் : லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி , பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவன் லண்டன் பங்குச்சந்தையில் குண்டு வைக்க முயற்சி செய்த வழக்கில் 8 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவன் என்றும் தெரிய வந்தது.






லண்டன் பிரிட்ஜ் அருகே பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


8 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவன்


லண்டன் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானில் பிறந்து பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றவன் உஸ்மான்கான் 28. இவன் 2012 ல் லண்டன் பங்குச்சந்தை அலுவலகத்தில் குண்டு வைக்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டான். தொடர்ந்து இந்த விசாரணையில் அவனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.





மேலும் கான் இஸ்லாமிய கொள்கையில் நம்பிக்கை கொண்டவன் என்றும், ஜிகாத்தை பின்பற்றி வந்தவன் என்றும் அந்த தீர்ப்பில் கோடிட்டு காட்டப்பட்டடுள்ளது. கான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளான். அங்கு முழு அளவில் பயிற்சி எடுத்துள்ளான் என்ற தகவலும் உறுதியாகி உள்ளது. இவன் அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்தானா என்ற ஆதாரம் ஏதும் இல்லை.
நேற்று நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட உஸ்மான்கான், உடலில் போலியான வெடிகுண்டுகளை கட்டி வந்துள்ளான். இவன் லண்டன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - Palani,இந்தியா
01-டிச-201905:09:10 IST Report Abuse
sivan ஒருமுறை ஜிகாத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றால் அவனை எட்டு வருடத்தில் வெளியே விட்டது மிகப் பெரிய தவறு. என்னவோ மதசார்பின்மை என்று சொல்லி ரொம்பத்தான் இஸ்லாமியருக்கு கிரீடம் வைக்கிறார்கள் ஐரோப்பியர்கள்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
01-டிச-201904:57:14 IST Report Abuse
oce கத்தி சண்டைக்கு பயிற்சி தேவை. அதை குத்துவதற்கு கூடவா பயிற்சி தேவை. இதுக்கு ஒரு பாகிஸ்தான்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-டிச-201904:53:48 IST Report Abuse
J.V. Iyer கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? எங்கு கலவரம், வெடிகுண்டு வைப்பு, துப்பாக்கி சூடு என்று இருந்தாலும் யாராக இருக்கும் என்று மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டாம்.
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
02-டிச-201904:55:17 IST Report Abuse
meenakshisundaramபிறவிகள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X