பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : நவ 30, 2019
Advertisement

அபாய பள்ளம்; விபத்து வாய்ப்பு: குமாரபாளையம், சரவணா தியேட்டர் எதிரில் பெட்ரோல் பங்க் முன் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதன் பணி முடிவடையாவிட்டாலும் பாதுகாப்புக்காக நான்கு புறமும் ஒளிரும் ஸ்டிக்கர், பாதுகாப்பு டேப், எச்சரிக்கை போர்டு ஆகிய எதையும் வைக்காமல், வெறுமனே விட்டு சென்றுள்ளனர். இரவு நேரத்தில், அனைத்து வாகனங்களும் வேகமாக வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. டூவீலரில் வருபவர்கள் இந்த இடத்தில் நிலை தடுமாறி கீழே விழ நேரிடுகிறது.
ஏரியில் குவிக்கப்படும் கழிவுகளால் பாதிப்பு: மல்லசமுத்திரம் சின்ன ஏரி, 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து, சின்னகொல்லப்பட்டிக்கு செல்லும் சாலையில் பகுதியினர் அதிகளவில் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் மாசுபடுவதுடன், விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த இடத்தில் குப்பை கழிவுகளை கொட்ட தடை விதிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

சாலை நடுவே மின் கம்பம்: நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ரயிவே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அங்கிருந்து சென்னை, பழனி, சேலம், திருநெல்வேலி, கரூர், திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேந்தமங்கலம் சாலைக்கும், துறையூர் சாலைக்கும் இடையே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையில் இருந்து தற்போது ரயில்வே ஸ்டேஷன் வரை புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை நடுவே உள்ள மின் கம்பம், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

பாதையில் முட்புதர்; ஓட்டுனர்கள் அவதி: பள்ளிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் பின்புறத்தில் செல்லும் தார்ச்சாலை பிரதான ஒட்டமெத்தை செல்லும் சாலையுடன் இணைக்கிறது. இந்த சாலையின் இருபுறத்திலும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டன. ஆனால், பராமரிப்பு இல்லாததால், அவை காய்ந்து வருகின்றன. சாலையின் இருபுறத்திலும் முட்புதர் வளர்ந்து, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பை, கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மின் ஒயர்களை உரசும் மரக்கிளை: சத்யாநகரில் இருந்து, மல்லசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தில், அதிகளவிலான மரக்கிளைகள் மின் ஒயர்களை உரசிக் கொண்டுள்ளன. காற்று வீசும்போது, ஒயர்களில் உரசுவதால், அடிக்கடி தீப்பற்றுகிறது. இதனால், அருகிலுள்ள குடியிருப்புகளில் தீ பரவி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால், மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதுடன், உயிரிழப்பு கூட ஏற்படலாம். ஒயர்களை உரசும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X