பொது செய்தி

தமிழ்நாடு

அரசு இடத்தில் போலீஸ் பாதுகாப்பு

Added : நவ 30, 2019
Advertisement

பள்ளிபாளையம்: சில்லாங்காடு பகுதியில் உயர்கல்விதுறை மற்றும் வட்டார போக்குவரத்து துறைக்கு சொந்தமான இடத்தில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அடுத்த, சில்லாங்காடு பகுதியில் ஓடையின் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் ஒரு பகுதி உயர்கல்வி மற்றம் போக்குவரத்து துறைக்கு சொந்தமானது. இதனால், இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பல இடங்களில் துறைகளின் சார்பில், 'அரசுக்கு சொந்தமான இடம்' என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம், பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க, இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X