குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சேலம் மண்டல பொது தொழிலாளர் சங்க, 20ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் தொழிலாளர்களை ஒருங்கிணைத்தார். குமாரபாளையத்தில், 20க்கும் மேற்பட்ட குறு நிதி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, அதிகமான வட்டி வசூலித்து வருவதை தமிழக அரசு தடுத்து பொதுமக்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, ஆண்களுக்கு, 58 வயது முடிவிலும், பெண்களுக்கு, 55 வயது முடிவிலும் ஓய்வூதியம் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்ளுதல், தலைமை அஞ்சலகத்தை, நகர எல்லைக்குள் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.