ராசிபுரம்: மாவட்ட அளவில் நடந்த நாடக நிகழ்ச்சியில், தொ.ஜேடர்பாளையம் அரசுப் பள்ளி முதலிடம் பிடித்தது. மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நாடகம், நடனம், செய்கை நாடகம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 25 பள்ளிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 'பெண் குழந்தைகளை காப்போம்' 'பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில், நடனம், நாடகம், வசனமில்லா நாடகம், பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன. செய்கை நாடகம் பிரிவில், தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதல் பரிசு பெற்றனர். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கோமதி, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் உஷா, மகிளா சக்தி கேந்திர திட்ட ஒருங்கணைப்பாளர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவியரை தலைமை ஆசிரியர் ஜோதி கண்மணி, பி.டி.ஏ., துணைத்தலைவர் பழனிவேல், உதவி தலைமை ஆசிரியர் முத்துநல்லியப்பன் உள்ளிட்டோர் பாராட்டினர்.