நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை சேர்ந்த கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவிக்கும் வகையில், 2018-19ம் ஆண்டுக்கு, ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது, தலா, ஒருவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், இரண்டு பேருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் விருது வழங்கப்படுகிறது. அதற்கான மாதிரி விண்ணப்பம், நாமக்கல் மாவட்ட இணையதளத்தில் (www.namakkal.nic,in) வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வரும், டிச., 6 வரை, அலுவலக வேலை நாட்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:45 மணி வரை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.