எலச்சிபாளையம்: வேலகவுண்டம்பட்டியில், மழைநீரால் சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி கவுண்டர் காலனியில், 50க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இதுவரையில் இங்கு தார்ச்சாலையோ, சிமென்ட் சாலையோ அமைக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக பெய்துவரும் கனமழையால், சாலையில் மண்அரிப்பு ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால், பகுதியினர் நடக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன டயர்கள் பஞ்சராகின்றன. அதுமட்டுமின்றி, குடியிருப்புகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் கலந்து புகுந்து விடுவதால், தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, மண் சாலையை அகற்றி, கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.