பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர், டி.ஆர்.ஓ., பங்கேற்பு

Added : நவ 30, 2019
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாயத்துக்கு அனுப்புதல், பண்ணை குட்டைகளை உருவாக்குதல், விவசாயிகளுக்கு பழ வகை செடிகளை இலவசமாக வழங்குதல், மழை காரணமாக குளங்களில், தேங்கிய தண்ணீரை, வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்பட விவசாயிகள் தரப்பில் இருந்து

கரூர்: கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாயத்துக்கு அனுப்புதல், பண்ணை குட்டைகளை உருவாக்குதல், விவசாயிகளுக்கு பழ வகை செடிகளை இலவசமாக வழங்குதல், மழை காரணமாக குளங்களில், தேங்கிய தண்ணீரை, வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்பட விவசாயிகள் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட, 43 கோரிக்கைகளில், 42க்கு பல்வேறு அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஒரு கோரிக்கை, அதிகாரிகள் தரப்பில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கரூர் ஆர்.டி.ஓ., சந்தியா, வேளாண்மை துறை துணை இயக்குனர் கந்தசாமி உள்பட பலர், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X