கரூர்: ''கரூர் மாவட்டத்தில், 472.58 மி.மீ., மழை பெய்துள்ளது'' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டு நவம்பர் மாதம் முடிய, 604.33 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இதுவரை, 472.58 மி.மீ., மழை பெய்துள்ளது. உணவு தானிய உற்பத்தி இலக்கை எட்ட, சான்று பெற்ற நெல் ரகங்கள் கோ-51 மற்றும் டி.கே.எம்-13 ஆகியவை, 170 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் சோளம் சி.எஸ்.வி-20, கே-12, குதிரை வாலி கோ-2, வரகு கோ-3, ஆகிய ரகங்கள், 3.65 மெட்ரிக் டன், துவரை கோ.ஆர்.ஜி-7, உளுந்து வி.பி.என்-5,6, கொள்ளு பி.ஒய்-2 என மொத்தமாக, 6.35 மெட்ரிக் டன், பயறு வகை, விதைகள் மற்றும் நிலக்கடலை விதை ரகம் கே-6,9, டி.எம். வி-13, கோ-6,7 மற்றும் தாரணி ரகம் மொத்தம், 1.08 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து விதைகளும், மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி, சான்று பெற்ற தரமான விதைகளை பெற்று பயன் பெறலாம். மேலும், தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா, 1,355 மெட்ரிக் டன், டி.ஏ.பி-755 மெட்ரிக் டன், பொட்டாஷ், 1,003 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம், 1,872 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.