பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : நவ 30, 2019
Advertisement

சாலையில் கம்பம் அகற்றப்படுமா? குளித்தலை அடுத்த, வதியம் பஞ்., கண்டியூர் அய்யர்மலை நெடுஞ்சாலையில் நடுவதியம், கீழவதியம் என இரண்டு கிராமத்திற்கு செல்ல சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மின் கம்பம் நடுவில் இருப்பதால் வாகனங்களில் விவசாய இடுபொருட்கள் மற்றும் வீடு உபயோக பொருட்களை கொண்டு செல்லமுடியாமல் தவிக்கின்றனர். பொது மக்கள் மற்றும் வாகனங்கள் தடையில்லாமல் செல்ல அந்த கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீர் பாலம்; விபத்து வாய்ப்பு: குளித்தலை அடுத்த, நெய்தலூர் பஞ்., நங்கவரம் காவல்காரன்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் நெய்தலூர் இந்திரா நகர் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருவில் செல்லும் சிமென்ட் சாலையில் கழிவு நீர் வடிகால் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் இத்தெருவிற்கு செல்லும் மக்கள் , வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். பாலத்தை சரி செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

சுகாதார நிலைய கட்டடம் சேதம்: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., குறிச்சி கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. கிராம செவிலியர் தங்கியிருந்து, மக்களுக்கு மருத்துவ சேவை செய்யவேண்டும். இந்த கட்டடத்தில் செவிலியர் தங்காததால் கட்டடம் சேதமடைந்து வருகிறது. இதே போல், பொய்யாமணி, நங்கவரம், மேட்டுமருதூர், எழுநூற்றுமங்கலம் உள்ளிட்ட பல துணை சுகாதார மையங்களில் செவிலியர்கள் தங்காததால் கட்டடம் சேதமடைந்து வருகிறது.

அரசு பள்ளியில் விறகு பயன்பாடு: குளித்தலை, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், 1,700 க்கு மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். மழைக்காலங்களில் விறகு தட்டுப்பாடு தவிர்க்கவும், பாதுகாப்பான சமையல் செய்யவும் தமிழக அரசு மூலம் காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அனைத்து சத்துணவு மையங்களுக்கும் காஸ் அடுப்பு மூலம் சமையல் செய்யப்படுகிறது. இந்த பள்ளியில், மாணவியருக்கு மதிய உணவு தயார் செய்ய, விறகு அடுப்பு மூலம் சத்துணவு சமைக்கப்படுகிறது.

அங்கன்வாடி மைய கட்டடம் சேதம்: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூர் பழைய மருத்துவமனை வளாகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மையம் கட்டடப்பட்டது. இந்த கட்டடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. அருகில் உள்ள பழைய மருத்துவமனையில் குழந்தைகளுக்கு வகுப்பு நடக்கிறது. மேலும், புதியதாக இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் குழந்தைப் பள்ளி துவங்கப்பட்டது. இரண்டு பள்ளியும் மருத்துவ மனையில் செயல்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X