பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலை அகற்ற மக்கள் எதிர்ப்பு: அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
குளித்தலை: முதலைப்பட்டியில், கோவிலின் ஒரு பகுதியை அப்புறப்படுத்த அதிகாரிகள் முயன்றதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அரசு ஆவணங்களை, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, முதலைப்பட்டி குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அதிகாரிகள் அகற்றினர். பின்னர், குளத்தின் கரையில்

குளித்தலை: முதலைப்பட்டியில், கோவிலின் ஒரு பகுதியை அப்புறப்படுத்த அதிகாரிகள் முயன்றதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அரசு ஆவணங்களை, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, முதலைப்பட்டி குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அதிகாரிகள் அகற்றினர். பின்னர், குளத்தின் கரையில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோவிலின் ஒரு பகுதியை அகற்றுமாறும் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த, 25க்குள் கோவிலை பொதுமக்களே அகற்றிக்கொள்ள வேண்டுமென, அதிகாரிகள் அறிவுறுத்தினர். நேற்று மதியம், 12:00 மணியளவில் சப்- கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் தாசில்தார் மகாமுனி, ஏ.பி.டிஓ., ராணி மற்றும் வருவாய் துறையினர் கோவிலை பார்வையிட்டனர். தகவலறிந்த, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 13க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட மக்கள், முதலைப்பட்டி வி.ஏ.ஓ., மற்றும் பஞ்.,அலுவலக வளாகத்தில் குவிந்தனர். கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் சேலை முந்தானையில் மடிப்பிச்சை கேட்டும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் 100 நாள் வேலை திட்ட அட்டை ஆகியவற்றை வி.ஏ.ஓ., பழனிவேல் ராஜனிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., வேலு தலைமையிலான, 100க்கும் மேற்பட்ட போலீசார், சம்பவ இடத்தில் குவிந்தனர். பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, வரும், 2ம் தேதி பொதுமக்கள் கலெக்டரை சந்திக்க முடிவு செய்து, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X