பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார மையத்தில் இலவச மருத்துவ முகாம்

Added : நவ 30, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை நகர ஆரம்ப சுகாதார நிலையமும், குளித்தலை நகராட்சியும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம், குளித்தலை கடம்பர்கோவில் தெருவில் நடந்தது. நகராட்சி கமிஷினர் (பொ) புகழேந்தி முகாமை தொடங்கி வைத்தார். குளித்தலை நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அமிர்தீன், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தார். சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் டெங்கு காய்ச்சல் மற்றும் சுகாதாரம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, இலவச நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. மேலும் டெங்கு பரிசோதனை நடத்தப்பட்டது. நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தன், மாசி மற்றும் சுகாதார துறை அலுவலர்கள், செவிலியர்கள், மஸ்தூர் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X