மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வலியுறுத்தல்| Dinamalar

மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வலியுறுத்தல்

Added : நவ 30, 2019
Share
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மின் கம்பங்களில் வளர்ந்துள்ள செடிகளை, அகற்ற வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சியில் உள்ள, 48 வார்டுகள், அதையொட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளான ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு, காதப்பாறை உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் வினியோகம்

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மின் கம்பங்களில் வளர்ந்துள்ள செடிகளை, அகற்ற வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சியில் உள்ள, 48 வார்டுகள், அதையொட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளான ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு, காதப்பாறை உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, பல மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்து படர்ந்துள்ளன. இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மழை பெய்து வரும் நிலையில், செடிகள் வேகமாக வளர்ந்து மின் கம்பங்களில் படர்ந்துள்ளது. மேலும், கம்பங்களில் செடிகள் படர்ந்துள்ள நிலையில், ஈரப்பதம் காரணமாக மின்சாரம் பாயும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, செடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X