திறந்தவெளி டாஸ்மாக் பாராக மாறிய வெங்கமேடு ரயில்வே பாலம் பகுதி

Added : நவ 30, 2019
Advertisement

கரூர்: கரூர் நகரின் மையப்பகுதியில் உள்ள, வெங்கமேடு ரயில்வே பாலத்தின் கீழ் பகுதி, திறந்த வெளி டாஸ்மாக் மதுபான கடை பாராக மாறி வருகிறது. கரூர்-வெங்கமேடு பகுதியை இணைக்கும் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியில், டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. கரூர் மற்றும் வெங்கமேடு பகுதியில் வசித்து வரும் மக்கள், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள, இருப்பு பாதையை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் பாருக்கு வரும் குடிமகன்கள், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியை, திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருவதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், ' ரயில்வே மேம்பாலத்தில் நடந்து செல்ல முடியவில்லை. மேலும், பாலத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, படிக்கட்டு வசதிகள் இல்லை. இதனால், ரயில்வே இருப்பு பாதையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த இடத்தை சிலர், திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், மதுபாட்டில்கள் வாங்கி சென்று, மேம்பாலத்துக்கு கீழ்ப்பகுதியில் அமர்ந்து குடிக்கின்றனர். பிறகு, அங்கேயே பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர். இதனால், அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X