பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

Added : நவ 30, 2019
Advertisement

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை, மழை பெய்தது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் காலை முதல், கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு கரூர், திருமாநிலையூர், புலியூர், தான்தோன்றிமலை, வெங்கமேடு, திருகாம்புலியூர், சுக்காலியூர், காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு, சாரல் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) கரூர், 8.3, அரவக்குறிச்சி, 1, அணைப்பாளையம், 8.2, க.பரமத்தி, 5.6, குளித்தலை, 4, கிருஷ்ணராயபுரம், 10, மாயனூர், 16, பஞ்சப்பட்டி, 8, கடவூர், 15, பாலவிடுதி, 24.1, மயிலம்பட்டி, 8 மி.மீ., மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X