கலிபோர்னியாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் மைசூரை சேர்ந்த 25 வயதான மாணவர் அபிஷேக் சுதேஷ் பட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.



latest tamil news


கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த அபிஷேக், பணத்தேவைக்காக அங்குள்ள உணவுவிடுதியில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். பணி முடித்து வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர் .அபிஷேக்கின் உடல் கலிபோர்னியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே உணவு விடுதியில் பணியாற்றிய அபிஷேக்கின் நண்பர் அளித்த தகவலின் பேரிலேயே அபிஷேக், கொலை செய்யப்பட்டது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.


latest tamil news


மைசூரில் உள்ள குவெம்புநகரை சேர்ந்த யோகா குருவான சுதேஷ் சந்தின் மகன் தான் அபிஷேக். சுதேஷ் சந்த், 16 ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். மைசூரு வித்யா விகாஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த அபிஷேக், 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்றுள்ளார்.
கொலை செய்யப்படும் அளவிற்கு அபிஷேக்கிற்கு யாருடன் விரோதம் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தான் கலிபோர்னியா பல்கலை.,யில் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டிருப்பதாக அக்.,31 அன்று அபிஷேக், தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
01-டிச-201905:20:18 IST Report Abuse
oce இவன் ஒரு தனி ஆள். வேளா வேளைக்கு உணவு தேவை அதையார் அவனுக்கு சமைத்து போடுவது. கம்புக்கும் களைவெட்டியது போல் தம்பிக்கும் பெண் கட்டியது போல் அதாவது தனக்கும் உணவு கிடைப்பது போலவும் உணவு விடுதியில் வேலை செய்து சம்பாதிப்பது போலவும் ஏர் மாறான வழக்கத்தை வைத்து எங்கோவொரு சிக்கலில் மாட்டியுள்ளான். பிறந்த மனிதன்முதலில் பாதுகாப்புடன் வாழ கற்றுக்கொள்வது அவசியம்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
01-டிச-201905:09:34 IST Report Abuse
oce துப்பாக்கி கலாச்சராம் அமெரிக்காவில் அதிகம்.டிஜாங்கோ படம் பார்த்தால் தெரியும். அங்குள்ளவன்கள் பிரச்சினைகளை பேசி தீர்க்க மாட்டான்கள். பிடிக்கவில்லையா துப்பாக்கியை தூக்குவான்கள். இந்தியாவில் நல்ல குடும்பத்ததில் பிறந்தவர்கள் வெளிநாடு சென்று தான் படிக்க வேண்டுமா. அந்த கல்வி இங்கு இல்லையா.
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
01-டிச-201904:36:03 IST Report Abuse
Muraleedharan.M கைக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் வேலைக்கு போனான். இதில் என்ன தப்புள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X