மஹா., சட்டசபையில் சிவசேனா 169 ஒட்டுக்கள் பெற்று வெற்றி | Dinamalar

மஹா., சட்டசபையில் சிவசேனா 169 ஒட்டுக்கள் பெற்று வெற்றி

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (56)

இந்த செய்தியை கேட்க

மும்பை : மஹாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் சிவசேனாவுக்கு ஆதரவாக 169 ஓட்டுகள் பெற்று தனது மெஜாரிட்டியை நிரூபித்தது.






மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று ( 30 ம் தேதி ) நடந்தது. கூட்டம் துவங்கியதும் , ஓட்டெடுப்பிற்கு முன் பேசிய முன்னாள் முதல்வர் பட்னவிஸ், இந்த சட்டசபை கூட்டம் விதிகளின்படி நடத்தப்படவில்லை. வந்தே மாதரத்துடன் துவங்கப்படவில்லை. இது விதிகளை மீறியதாகும். மஹாராஷ்டிர சட்டசபை வரலாற்றிலேயே, சபாநாயகரை தேர்வு செய்யாமல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தியதில்லை. இப்போது அவசரமாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த அவசியம் என்ன? இப்போது ஏன் பயம் வந்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.


பா.ஜ., அமளி, வெளிநடப்பு






பட்னவிசின் பேச்சுக்கு ஆதரவாக பா.ஜ.,வினர் குரல் எழுப்பினர். இதனால் அவையில் அமளி நிலவியது. அப்போது பேசிய தற்காலிக சபாநாயகர் திலீப் பாட்டில், இந்த கூட்டத்தை நடத்த கவர்னர் தான் அனுமதி அளித்துள்ளார். விதிகளின்படியே இந்த கூட்டம் நடக்கிறது என விளக்கம் அளித்தார். பா.ஜ.,வினரின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கப்பட்ட போது, பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



இதன் பின்னர் பட்னவிஸ் கூறுகையில், சட்டசபை தொடர் சட்ட விரோதம். சட்டசபை துவங்கியதும் வந்தே மாதரம் பாடப்படவில்லை. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இடைக்கால சபாநாயகர் நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதம். சட்டசபை தொடரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கவர்னரிடம் கடிதம் அளிக்க உள்ளோம் என்றார்.

தொடர்ந்து நடந்த ஓட்டெடுப்பில் சிவசேனாவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் மொத்தம் 169 பேர் ஓட்டளித்தனர். இதில் உத்தவ்தாக்ரே அரசு வெற்றி பெற்றது. மொத்தம் 288 உறுப்பினர்களில் மெஜாரிட்டிக்கு 145 பேர் ஆதரவு அளித்தால் போதுமானது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X