பெண் டாக்டர் பலாத்காரம்: தலைவர்கள் கண்டனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண் டாக்டர் பலாத்காரம்: தலைவர்கள் கண்டனம்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (20)
PriyankaReddyMurderCase, JusticeForPriyankaReddyُ, HyderabadHorror, RIPHumanity,  பெண் டாக்டர், கொலை, ராகுல், தமிழிசை, தமிழிசை, கண்டனம்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நெடுஞ்சாலையில், கால்நடை டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.







தமிழிசை ஆறுதல்:

பெண் டாக்டரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



கண்டனம்


இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்
அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: ஐதராபாத்தில், டாக்டர் பிரியங்கா ரெட்டி, கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற கொடூரமான, தூண்டப்படாத வன்முறைக்கு யாராவது இன்னொரு மனிதனை எவ்வாறு உட்படுத்த முடியும்? இந்த சோகமான பெண்ணின் குடும்பத்தினருடன் எனது எண்ணமும், நினைவுகளும் உள்ளது.



ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டாக்டர் பிரியங்கா ரெட்டி, டாக்டர் பிரியங்கா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது வருத்தத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகரீகமான சமூகத்தில், இது போன்ற மனிதநேயமற்ற குற்றம் மற்றும் வன்முறைகளுக்கு இடமில்லை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குடும்பத்தினருக்காக வேண்டி கொள்கிறேன்.



ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்ஐதராபாத்தில், கால்நடை டாக்டர் கொலை செய்யப்பட்டது கொடூரமானது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.




டுவிட்டர் டிரெண்டிங்

பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, PriyankaReddyMurderCase, JusticeForPriyankaReddyُ , HyderabadHorror, RIPHumanity, ஆகிய ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டிங் பிடித்தது. இதில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தூக்கில் போட வேண்டும் என கோபத்துடன் சமூக வலைதளவாசிகள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X