பொது செய்தி

தமிழ்நாடு

" ஆவணங்களை தர மாட்டேன் " - பொன்.மாணிக்கவேல்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (36)
Advertisement
பொன்.மாணிக்கவேல், தமிழக அரசு,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

சென்னை: பணிக்காலம முடிவடைவதால் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பதிலளித்துள்ளார். அதில், நீதிமன்ற அனுமதியில்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், டி.அரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல், 61. காவல் துறையில், 1989ல், ராமேஸ்வரம், டி.எஸ்.பி.,யாக பணியை துவக்கினார். சேலம் எஸ்.பி., - உளவுத்துறை டி.ஐ.ஜி., - ரயில்வே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.ஐ.ஜி., மற்றும், அதே பிரிவுகளில், ஐ.ஜி.,யாக பணியாற்றி, 2018 நவ., 30ல், ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற நிலையில் ஓய்வு பெற்றார்.
அன்றே, சென்னை உயர் நீதிமன்றம், இவரை ஓர் ஆண்டுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது. அதன்படி, பொன் மாணிக்கவேலின் பணிக்காலம், இன்றுடன் (நவ.,30) நிறைவு பெறுகிறது.
இதற்கிடையில், பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் அவரது சார்பில், வழக்கறிஞர் மணி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை, டிச., 6க்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், பணிக்காலம் முடிவடைவதால், ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை இன்றைக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.





இதற்கு பதிலளித்து பொன்.மாணிக்கவேல் எழுதிய கடிதம்:
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க என்னை நீதிமன்றம் தான் நியமித்தது. இதனால், அரசின் உத்தரவு தனக்கு பொருந்தாது. வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்ததை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
நீதிமன்றம் உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க எனக்கு அனுமதியில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், தீர்ப்பு வரும் வரை அரசு காத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-டிச-201913:47:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் திராவிஷங்களை கழுவி ஊத்திய ராஜா சர்மாவும், அடிபொடிகளும் வாயை மூடிக்கிட்டு இருப்பதன் ரகசியம் என்னவோ? இந்துக்களே ஒன்றுபடுங்கள்ன்னு கூப்பிடேல்லை? இண்டர்போல் கணக்குப்படி 1,40,000 கலைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளனவாம். இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, தென் இந்தியா, தமிழகத்தில் இருந்து என்கிறது இன்டர்போல் அறிக்கை. இவர் சொல்றது ஒரு 480 சிலைகளாம்.. குறைந்தது (சராசரி) ஒவ்வொன்றின் மதிப்பும் ஒரு மில்லியன் டாலரை தாண்டும் என்கிறது இன்டர்போல்.கிட்டத்தட்ட பொன்மாணிக்கவேலின் அறிக்கையில் உள்ளதே 3000 கோடியை தாண்டுகிறது. கொள்ளையடிக்கும் ஆட்சியிலிருக்கும் களவாணிகளும், காவல்காக்கும் கமிஷன் அயோக்கியன்களும் எப்படி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
01-டிச-201918:22:47 IST Report Abuse
bal மக்கள் வாய் பொத்தி இருக்கும்.. குவாட்டருக்கும் பிரியாணிக்கும் துட்டுக்கும் வோட்டு போடும் மக்களுக்கு இது வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201920:36:10 IST Report Abuse
Suresh Ramaiya Hats off you Sir!! Its Great
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X