பொது செய்தி

இந்தியா

காதலியாக நடித்து குற்றவாளியை பிடித்த பலே பெண் எஸ்.ஐ.,

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (20)
Advertisement
ம.பி., போலீஸ், குற்றவாளி, எஸ்ஐ, திருமணம், Madhya Pradesh, woman inspector,  bride, murder accused

போபால்: காதலிப்பதாகக் கூறி, கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு தாதாவை பிடித்த பெண் சப் இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், சதார்பூர் மாவட்டம் நவுகோன் பகுதியை சேர்ந்தவர் பாலகிஷன் சவுபே. பெரிய தாதாவான அந்த நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். ஆனால் பிடிக்க முடியவில்லை. அவரை பிடித்து கொடுத்தால், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட எஸ்.பி., அறிவித்தார்.
இந்நிலையில், பாலகிஷன், தனது திருமணத்திற்காக, பெண் தேடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து , சப் இன்ஸ்பெக்டர் மாதவி என்பவர், பாலகிஷனை திருமணம் செய்வதாக கூறி, தனது பழைய போட்டோவை, அவரது நண்பர் மூலம் அனுப்பியுள்ளார்.
போட்டோவை பார்த்து மயங்கிய பாலகிஷன், மாதவியை சந்திக்க ஒப்பு கொண்டுள்ளார். இதற்கான இடமும் முடிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பாலகிஷனை, அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். பெண் சப் இன்ஸ்பெக்டரின், இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
03-டிச-201914:26:34 IST Report Abuse
atara This is how Females Cheat in marriage, The purpose is to identify the person so when a person is communication through another friend. Even Criminals have freedom to marry a police officers. Or police officers also criminals in the society.
Rate this:
Share this comment
Cancel
வாடகைபாக்கி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
02-டிச-201912:20:05 IST Report Abuse
வாடகைபாக்கி  சொடலை புதிய பறவைல சரோசாதேவி ஏற்கணமே பண்ணின டெக்கினிக்கு தான் டா... இதுக்குதான் மிஸ்டர் தாதா தமிழ் கத்துக்கோனும், தமிழ் படங்கள் பாக்கோணும்
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
01-டிச-201908:55:22 IST Report Abuse
Varun Ramesh நம்ம ஊரு போலீசாக இருந்திருந்தால் கதை வேறு மாதிரி முடிந்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X