பொது செய்தி

இந்தியா

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (11)
Advertisement
Bihar, Cooperative Workers, Helmets, Onions, Public Outrage, பீஹார்,பீகார், வெங்காயம், ஹெல்மெட்

பாட்னா: பொதுமக்கள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, பீகார் மாநில கூட்டுறவு பண்ணை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்திய சமையலில் வெங்காயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. பெரும்பாலான உணவு பண்டங்களில் வெங்காயம் கண்டிப்பாக இடம்பெறும். சில நாட்களாக வெங்காயத்தின் விலை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில், பீகார் மாநில அரசின் உதவியுடன் செயல்பட்டு வரும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில், வெங்காயம் கிலோவுக்கு ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இங்கு, பொது மக்கள், அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். வெங்காயம் விரைவில் விற்று தீர்ந்து விடுகிறது. கிடைக்காதவர்கள் கோபமடைந்து ஊழியர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கிறுகின்றன.




இதனால், பீஹாரில் பாட்னாவில் உள்ள கூட்டுறவு பண்ணை ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹெல்மெட் அணிந்து கொண்டு விற்பனை செய்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
01-டிச-201902:14:56 IST Report Abuse
chenar இல்லை காஞ்சி சங்கரன் சொன்னதால் ?....
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-டிச-201900:12:01 IST Report Abuse
Vena Suna ஹெல்மெட்டிற்குள் பல வெங்காயங்களை பதுக்கி வைப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201920:49:20 IST Report Abuse
இனியவன் ஹிந்துக்கள் அதிகம் வசிப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார்கள் போல.. மூர்க்கமானவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X