சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 30, 2019
Advertisement

அறிவியல் ஆயிரம்

பனிச்சரிவு


பனிக்கட்டி என்பது நீர், குளிர்நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவது. இது வெப்பநிலை
'0 டிகிரி' செல்சியசுக்கு கீழ் குறையும் போது பனிக் கட்டியாகிறது. மலைப்பகுதிகளில் பனிக்கட்டிகள் படர்ந்திருக்கும். இவை வானிலை காரணமாக சரிகின்றன. பனிபடர்ந்த சாய்வான மலைப்பகுதியில் இருந்து பனிக்கட்டிகள் சரிவது பனிச்சரிவு எனப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும் போது வேகமாக கீழ்நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்கள், பொருட்கள், மக்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கின்றது.

தகவல் சுரங்கம்

பாதயாத்திரையின் தந்தை


இந்தியாவில் எங்கு சென்றாலும் நடந்தே செல்வது என்ற கொள்கையை வைத்திருந்தவர் வினோபா பாவே. 1895 - 1982 வரை வாழ்ந்த இவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அதிக துாரம் பாதயாத்திரை செய்தவர். நடப்பதால், வாகனங்களைச் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட காரணமாக இருப்பதும் இல்லை. அதிக மக்களை நேரடியாகச் சந்திக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என பாதயாத்திரையை தேர்ந்தெடுத்தார். எனவே 'பாதயாத்திரையின் தந்தை' என்றும் சிறப்பிக்கப் படுகிறார். 'பாரத ரத்னா' விருது பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X