அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றத்தை நாடியது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

Added : நவ 30, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவுப் படி வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன். ஆனால், அந்த புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை. அடுத்தது பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின, பழங்குடியின பெயர்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் முறைப்படுத்தி அரசு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்களா என்பது எனது கேள்வி. இது முதல்வர் சொல்ல வேண்டாம். ஆனால், தேர்தல் ஆணையமாவது இதை வெளிப்படுத்த வேண்டும் .உள்ளாட்சி தேர்தலை திமுக தடுக்கவில்லை. புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு இருக்கிறதா ? வார்டு வரையறை செய்து தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காக திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
30-நவ-201919:04:58 IST Report Abuse
madhavan rajan எடப்பாடி அவர்கள் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் அறிவுப்பு வரும் என்று கூறியவுடனேயே இவர் ஊடகங்கள் மூலமாக இவையெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டனவா என்று கேள்வி எழுப்பியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை. இப்போது எதற்கு ஊடகங்கள் முன் வந்து விளக்கம் அளிக்கிறார். ஆளும் கட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது என்று கூறியபோது எங்கே போயிற்று இந்த அறிவு?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-நவ-201918:48:50 IST Report Abuse
Cheran Perumal நேற்றுதான் திமுக கேஸ் போட்டதாக பொய் சொல்கிறார்கள் என்று அறிக்கை விட்டார். இன்று சப்பை கட்டு கட்டுகிறார். திமுக வில் இவருக்கே தெரியாமல் சில விஷயங்கள் நடப்பதாக கேள்விப்படுகிறேன். அதில் இதுவும் ஒன்றா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X