பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 3 மணி நேரம் நீடித்தது கனமழை

Updated : டிச 01, 2019 | Added : நவ 30, 2019
Advertisement

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தவெளி, நுங்கம்பாக்கம் ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, தாம்பரம், பம்மல், மயிலாப்பூர், முடிச்சூர், ஆதம்பாக்கம், தியாகராய நகர் , கே.கே.நகர், கொளத்தூர், கே,கே,நகர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மேலும் 3 மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் நகரில் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. தி.நகர் உஸ்மான் சாலையில் தண்ணீர் வெள்ளம்போல் அதிகரித்துள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்கிறது. பல துணிக்கடைகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் வாடிக்கையாளர்களும் கடை நிர்வாகிகளும் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.







கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால், பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

நாமக்கல் மாவட்டம், ராசிபரம் பகுதியிலும் மழை பெய்தது.


திருவாரூரில் கனமழை


திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்,சேந்தமங்கலம், ஆண்டி பந்தல், விளமல் கங்களாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, கருவேலங்கடை, செட்டிச்சேரி, வடவூர், தேவூர், சேராவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ராணிபேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலஜாபேட்டை பகுதியிலும் மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


நெல்லையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் எச்சரித்துள்ளார்.


கனமழையில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்


அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வி.கைகாட்டி காவலூரில் உள்ள விளாங்குப்பம் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால், 10க்கும்மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X