அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Added : நவ 30, 2019
Advertisement
ஒன்பது நிறுவனங்கள், தமிழக  அரசு, ஒப்பந்தம்

சென்னை: 3 அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்பது தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ. 5,027 கோடியில் 20,351 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை , மாவட்ட திறன் மேம்பாட்டு அறிக்கைகளை முதல்வர் வெளியிட்டார். தொடர்ந்து தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் தொழில் நண்பன் (biz buddy) இணைய தளம் துவக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு தொழில் வழி்காட்டி நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும் லோகாவை முதல்வர் வெளியி்ட்டார். மேலும் 23.43 கோடி மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.

டி.ஆர்.டி.ஓ., சென்னை ஐஐடி நிறுவனங்களுடன் பாதுகாப்பு தொழில் பெருவழித்திட்டத்திற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.60 கோடி மதிப்பீட்டில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களை முதல்வர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி சம்பத், நிலோபர் கபில் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X