சண்டிகர்: ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல் இன்று(நவ.,30) நடந்தது. 13 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 62.87 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.முதற்கட்டமாக 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 முக்கியமான தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது. இன்று முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 23-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜார்க்கண்ட்டில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் பெண் வாக்காளர்கள் மொத்தம் 18,01,356 இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி, நக்சல் பிரச்சனை காரணமாகவும் இந்த தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது.
இன்று நடந்த முதல்கட்ட தேர்தலில், 62.87 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருக்கிறது. பெண்கள் அதிகளவில் ஓட்டளித்தனர்.