பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தொழில் துவங்குவது எளிமை: முதல்வர் இ.பி.எஸ்.

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (5)
Advertisement
தமிழகத்தில், தொழில், துவங்குவது, எளிமை: முதல்வர் இ.பி.எஸ்.

சென்னை: தமிழகத்தில் தொழில் துவங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்பது தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ. 5,027 கோடியில் 20,351 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை , மாவட்ட திறன் மேம்பாட்டு அறிக்கைகளை முதல்வர் வெளியிட்டார். தொடர்ந்து தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் தொழில் நண்பன் (biz buddy) இணைய தளம் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு தொழில் வழி்காட்டி நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும் லோகாவை முதல்வர் வெளியி்ட்டார். மேலும் 23.43 கோடி மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. டி.ஆர்.டி.ஓ., சென்னை ஐஐடி நிறுவனங்களுடன் பாதுகாப்பு தொழில் பெருவழித்திட்டத்திற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.60 கோடி மதிப்பீட்டில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களை முதல்வர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி சம்பத், நிலோபர் கபில் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதல்வர் பேசுகையில், ஒப்பந்தங்கள் மூலம் 20, 351 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் தொழில் துவங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக தொழிற்சாலை உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ரூ. 3 கோடியில் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் குறை தீர்க்க தொழில் நண்பன் செயலி துவக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்பட்டு, தொழில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
01-டிச-201912:12:35 IST Report Abuse
Shekar Raghavan கொடுக்கவேண்டியதை கொடுத்தால் கிடைக்கும் இல்லை கடிக்கும், ஆமா தமிழகம் எட்டாம் இடம் எதில்???
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
01-டிச-201910:31:24 IST Report Abuse
அம்பி ஐயர் ஆமாம்... உண்மை தான்... கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் தொழில் அதிபர் ஆகலாம்.... பணம் மட்டும் இருந்தால் போதும்....
Rate this:
Share this comment
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
01-டிச-201909:07:47 IST Report Abuse
Kadaparai Mani இந்தியாவில் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதோடு, அதன் பொருளாதாரம் நாட்டிலேயே 2-ம் இடம் பிடிக்கிறது. முதல்வர் கலக்குகிறார் . தமிழக மீடியா தான் கண்டுகொள்வதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X