சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

புதிய மாவட்டங்களின் செயலர் பதவிக்கு போட்டி!

Updated : டிச 01, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
''முதல்ல, 500 ரூபாய் தான் குடுக்க இருந்தாங்க... அப்புறமா தான், ஏத்திட்டாங்க...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''பொங்கல் பரிசா, 1,000 ரூபாய் தர்றதைச் சொல்லுதீரா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''ஆமாம்... தமிழக அரசின் நிதி நிலைமை, கவலைக்கிடமா இருக்கு... அதனால, இந்த வருஷம், பொங்கலுக்கு தலா, 500 ரூபாய் மட்டும் குடுக்கலாம்னு இருந்திருக்காங்க...''ஆனா, ஒரு சில
டீ கடை பெஞ்ச்''முதல்ல, 500 ரூபாய் தான் குடுக்க இருந்தாங்க... அப்புறமா தான், ஏத்திட்டாங்க...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''பொங்கல் பரிசா, 1,000 ரூபாய் தர்றதைச் சொல்லுதீரா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''ஆமாம்... தமிழக அரசின் நிதி நிலைமை, கவலைக்கிடமா இருக்கு... அதனால, இந்த வருஷம், பொங்கலுக்கு தலா, 500 ரூபாய் மட்டும் குடுக்கலாம்னு இருந்திருக்காங்க...''ஆனா, ஒரு சில அமைச்சர்கள், தங்களது மாவட்டங்கள்ல பங்கேற்ற நிகழ்ச்சிகள்ல, உள்ளாட்சி தேர்தலை மனசுல வச்சு, 'பொங்கல் பரிசா, இந்த வருஷம், 2,000 ரூபாய் வழங்கப்படும்'னு வாயை விட்டுட்டாங்க... அதனால, வேற வழியில்லாம, 500ஐ, 1,000 ரூபாயா உசத்திட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''இப்படி, மக்கள் வரிப்பணத்தை, வாரி வாரி விட்டு, கடைசியில கஜானா காலியாகி, தமிழக அரசு திவாலாகாம இருந்தா சரி தான்...'' என, அலுத்துக் கொண்ட அன்வர்பாய், ''புது மாவட்டங்கள்ல வேலை வாங்க, பலத்த போட்டி நடக்குது பா...'' என, அடுத்த மேட்டருக்கு சென்றார்.''எந்தத் துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''செய்தி, மக்கள் தொடர்பு துறையில தான்... வேலுார் மாவட்டத்துல இருந்து, திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களை பிரிச்சிருக்காங்களே... இதுல, பி.ஆர்.ஓ., மற்றும் ஏ.பி.ஆர்.ஓ., பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவுது பா...''இந்த வேலைகளில் உட்கார, ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆசியோட பலரும், சென்னைக்கு படையெடுத்தாங்க... ஆனா, 'வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி சொல்றவங்களுக்கு தான், போஸ்டிங்'னு சென்னையில சொல்லிட்டாங்க பா...''அதே மாதிரி, போட்டோகிராபர் பணியிடங்களை, முதல்ல உள்ளூர் ஆட்களை வச்சு, தற்காலிகமா நிரப்ப இருக்காங்களாம்... இதனால, வீரமணி தயவுக்காக, எல்லாரும் சுத்திட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''புதிய மாவட்டங்கள் சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''புதுசா உருவாக்கப்பட்ட அஞ்சு மாவட்டங்களுக்கும், ஆளுங்கட்சி சார்புல, மாவட்டச் செயலர்களை நியமிக்க இருக்காவ... இந்தப் பதவிகளைக் கேட்டு, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை நச்சரிச்சிட்டு இருக்காவ வே...''இதே மாதிரி, தி.மு.க.,வுலயும், சில எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமில்லாம, எம்.பி.,க்களும் மாவட்டச் செயலர் பதவிக்கு ஆசைப்படுதாவ... இவங்கள்ல பலர், உதயநிதி, சபரீசன் மூலமா, பதவியை வாங்க காய் நகர்த்திட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.பெஞ்சில் மேலும் பலர் அமர, டீயை குடித்து முடித்த பெரியவர்கள், இருக்கையை காலி செய்தனர்.

எஸ்.பி.,யின் அதிரடியால் மாமூல் போலீசார் கிலி!

''யாத்திரை போய், சாதனைகளை விளக்க போறாவ வே...'' என, முதல் மேட்டருக்கு முன்னுரை கொடுத்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்தக் கட்சியினரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு வாங்கிக் கொடுக்க, மதுரை புறநகர் மாவட்டத்துல, தாமரை சேவகர்கள் நியமிக்கப்பட்டிருந்தாவ... இவங்க, இலவச சமையல் காஸ், பிரதமர் வீடு உள்ளிட்ட திட்டங்களை, ஏழை, எளிய மக்களுக்கு வாங்கி குடுத்தாவ வே...''இப்ப, உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிட்டு இருக்கிறதால, இவங்களை வச்சு, மாவட்டம் முழுக்க யாத்திரை நடத்தப் போறாவளாம்... ஊர், ஊரா போய், மத்திய அரசின் சாதனைகள், அயோத்தி, காஷ்மீர் பிரச்னைகளை மத்திய அரசு கையாண்ட விதம் பத்தி, மக்களிடம் பிரசாரம் செய்ய போறாவ வே...'' என்றார், அண்ணாச்சி.\''வீடுகள்லயே நாட்டுக் கோழிகள் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு சென்றார் அன்வர்பாய்.''நிறைய பேர் இந்த தொழிலை செய்யறா... நீர் யாரைச் சொல்றீர் ஓய்...'' என, விசாரித்தார், குப்பண்ணா.''சென்னை, கிரீன்வேஸ் சாலையில இருக்கிற பங்களாக்கள்ல, அமைச்சர்கள் வசிக்கிறாங்கல்ல... இந்த பங்களாக்கள்ல, நாட்டுக் கோழிகளை, பல அமைச்சர்களும் வளர்க்கிறாங்க பா...''பிராய்லர் கோழி சாப்பிட்டா, உடல்நலக் கோளாறுகள் வரும்னு டாக்டர்கள் சொல்றதால, அமைச்சர்கள் பலரும், தங்களது சொந்த தேவைக்காக, கிராமங்கள்ல இருந்து, நாட்டுக் கோழிகளை வாங்கிட்டு வந்து, வளர்க்கிறாங்க...''குறிப்பா, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கதர் வாரிய அமைச்சர் பாஸ்கரன் வீடுகள்ல நிறைய நாட்டுக் கோழிகள் நடமாடிட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.''மாறுவேடத்துல போய், கலக்கிட்டு இருக்காருங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''ராமநாதபுரம் மாவட்ட புதிய, எஸ்.பி., யான வருண்குமார் அதிரடி அதிகாரியா இருக்கார்... சமீபத்துல, ராமநாதபுரத்துல, திருட்டுத் தனமான மது விற்கிறவரிடம் சாதாரண உடையில போன, எஸ்.பி., 'நான், கேணிக்கரை போலீஸ்... மாமூல் தராம, சரக்கு விற்கிறீங்களா'ன்னு மிரட்டியிருக்காருங்க...''சரக்கு வியாபாரி, 'பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாமூல் கொடுக்கிறோம்... உங்களுக்கும் எப்படி தர முடியும்'னு கேட்டிருக்கார்... அதோட, பஜார் ஸ்டேஷன் அதிகாரிக்கும் போன் போட்டு, 'மாமூல் கேட்டு ஒருத்தர் வந்திருக்கார்'னு சொல்லிட்டாருங்க...''கோபமான பஜார் அதிகாரி, 'போனை அவர்கிட்ட குடுய்யா'ன்னு சொல்லி, 'யாருய்யா நீ... லிமிட் தாண்டி வந்து, மாமூல் கேட்டுட்டு இருக்கே'ன்னு மிரட்டியிருக்காருங்க... 'நான், எஸ்.பி., பேசுறேன்'னு சொன்னதும், நடுங்கி போன அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டிருக்கார்... அவரை கடுமையா எச்சரிக்கை பண்ணி, 'இனி உங்க மேல புகார் வந்தா கடும் நடவடிக்கை எடுப்பேன்'னு சொல்லிட்டு போயிருக்காருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
01-டிச-201920:17:38 IST Report Abuse
Siva இவனுங்க எல்லாம் சிவன் சொத்து குல நாசம் என்றால் என்ன என்று கூட தெரியாத மாதிரி நடிக்கிறாங்க... காரணம் பேராசை கண்ணை மறைக்குது.... பலன் சாகும் முன் அனுபவித்து தீரனும்... அனுபவிப்பார்கள்.... ஆனால் பேராசை காரணமாக புத்தி வேலை செய்வதில்லை.. உங்கள் வாரிசை ஒரு நொடி நினைத்து பாருங்கள்... நிறைய பேர் தொங்கிடுவீங்க.
Rate this:
Cancel
A R J U N - sennai ,இந்தியா
01-டிச-201910:48:12 IST Report Abuse
A R J U N நான், எஸ்.பி., பேசுறேன்'னு சொன்னதும், நடுங்கி போன அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டிருக்கார்... அவரை கடுமையா எச்சரிக்கை பண்ணி,ஓ..இப்படியும் அதிகாரி இருக்காரா,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X