சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019
Advertisement
 அக்கம் பக்கம்

ஓவர் ஆட்டம்!

'இந்த வயதில், இவ்வளவு ஆட்டம் கூடாதுப்பா...' என, சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரேயை பார்த்து, மற்ற கட்சியினர் மட்டுமல்லாமல், சொந்த கட்சியின் மூத்த தலைவர்களே, ஆத்திரத்துடன் கூறுகின்றனர்.

மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததுமே, தன் மகன் ஆதித்ய தாக்கரேயை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்ப்பது என முடிவு செய்து விட்டார்.இதனால் தான், 'சுழற்சி முறையில் முதல்வர் பதவியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என, பா.ஜ.,வினருடன் போர்க்கொடி துாக்கினார். அந்த முயற்சி பலன் அளிக்காததால், அடுத்ததாக, காங்., தேசியவாத காங்., கட்சிகளின் ஆதரவுடன், தன் மகனை முதல்வராக்க முயன்றார்.அந்த இரு கட்சிகளுமே இதற்கு சம்மதிக்கவில்லை. 'அந்த பையனுக்கு, 29 வயது தான் ஆகிறது. இந்த வயதில் மிகப் பெரிய பொறுப்பை கொடுத்தால், விளையாட்டுத்தனமாக செயல்பட்டு, காரியத்தை கெடுத்து விட வாய்ப்புள்ளது' எனக் கூறி, திட்டவட்டமாக மறுத்து விட்டன.

வேறு வழியில்லாததால், தானே முதல்வராக பதவியேற்றார், உத்தவ் தாக்கரே. ஆதித்ய தாக்கரே, சற்றும் சளைக்கவில்லை. 'அப்பா, பெயருக்கு தான் முதல்வர். மற்றபடி, மஹாராஷ்டிராவில், இனி எல்லாமே நான் தான்' என கூறுவதுடன், அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை, அதிகாரமும் செலுத்த துவங்கி விட்டார்.கூட்டணி கட்சியினரும், எதிர்க்கட்சியினரும்,'இந்த பையனுக்கு, நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனால், இப்போதே ஓவராக ஆட்டம் போட்டு, காரியத்தை கெடுத்து விடுவார் போலிருக்கிறதே...' என, முணுமுணுக்கின்றனர்.
சுப்ரியா ராஜ்ஜியம்!

'இனி, அஜித் பவாரை நம்பி பயனில்லை; சுப்ரியாவை காக்கா பிடிக்க வேண்டியது தான்' என்ற முடிவுக்கு வந்து விட்டனர், தேசியவாத காங்., கட்சியின் முக்கிய நிர்வாகிகள். மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிந்த பின் நடந்த அனைத்து குழப்பங்களுக்கும் காரணமானவர் என, கைகாட்டப்பட்டவர், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் உறவினர் அஜித் பவார். எதையோ செய்ய நினைத்து, என்னென்னவோ ஆட்டம் ஆடி, கடைசியில் மண்ணை கவ்வியது தான், மிச்சம். தற்போது மீண்டும் அவர், சரத் பவார் பக்கம் வந்து விட்டாலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அவரை சந்தேக கண்ணோட்டத்துடனே பார்க்கின்றனர். தேசியவாத காங்., கட்சியில் பதவிக்காக ஆசைப்படுவோர் எல்லாம், அஜித் பவாரை தான், காக்கா பிடித்து வந்தனர். அஜித் பவாருக்கு ஜால்ரா அடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தனர். இப்போது அந்த கூட்டம், அவரை விட்டு விலகி, சரத் பவாரின் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான சுப்ரியா சுலேவை வட்டமடிக்க துவங்கியுள்ளது. மஹாராஷ்டிராவில், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான பதவியேற்றபோதும், எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பின் போதும், அனைவராலும் கவனிக்கப்பட்டவர் சுப்ரியா தான். தேசியவாத காங்., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'அஜித் பவாருக்கு, இனி பதவி கொடுக்கப்பட்டாலும், அவரை யாரும் பொருட்படுத்த மாட்டோம்; சுப்ரியாவிடம் சரண் அடைவது தான், அரசியல் எதிர்காலத்துக்கு உதவும்' என்கின்றனர்.
F

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X