சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்கவாத்தியம்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பக்கவாத்தியம்

'இப்ப எந்த கட்சியில இருக்காரு புகழேந்தி?'

அம்மா மக்கள் முன்னேற்ற கழக, முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, சேலம் வந்து
இருந்தார். நிருபர்களிடம் அவர், 'நான், தினகரனிடமிருந்து பணம் கேட்டதாக சொல்கின்றனர். அதை நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார். சேலத்திலிருந்து, அ.ம.மு.க.,
வேட்பாளர்களுக்கு, 200 கோடி ரூபாய், லோக்சபா தேர்தலுக்கு கை மாறியது.

அத்தேர்தலுக்கு, நானும் என்னால் முடிந்த அளவு பணம் கொடுத்துள்ளேன்; கோடிக்கணக்கில் அல்ல. தினகரன், லோக்சபா தேர்தலுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை பணம் பெற்று, மோசடி
செய்துள்ளார். அதை என்ன செய்தார் என, விளக்கம் தரவில்லை என்றால், அது குறித்து நான்
கூற வேண்டி இருக்கும்.'தற்போது, ஆர்.கே.நகர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து,
தினகரன் மறுபடியும் தேர்தலில் நிற்க தயாரா?' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'இப்போது இவர், எந்த கட்சியில இருக்காரு? அ.தி.மு.க.,விலும் சேர்க்க மாட்டேங்கிறாங்க... தினகரனும் கண்டுக்கலே... சும்மா, 'அடிச்சு' விடுறாரே...' என, சீரியசாய் கேட்க, மற்றவர்கள், கமுக்கமாய் சிரித்தனர்.

'ஸ்காட்லாந்து போலீசாரை மிஞ்சுவோமா?'

நாகை மாவட்டத்தில், காவல்துறை நண்பர்கள் குழுவிற்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. தஞ்சை சரக டி.ஐ.ஜி., லோகநாதன், விண்ணப்பங்களை வழங்கினார். 'எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், தொண்டு செய்யும் மனப்பான்மையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, இந்தக் குழு அமைக்கப்படுகிறது.

இக்குழுவினர், பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட வேண்டும். காவல்துறை, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கிறது. பொதுமக்களுக்கு, சட்டம் - ஒழுங்கு வாயிலாக பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.'எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் காவல்துறையினரே பாதுகாப்புப் பணியை மேற்கொள்வது இயலாத காரியமாக உள்ளது. அந்த இடத்தில், காவல்துறை நண்பர்கள் இருந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்' என்றார்.

பார்வையாளர் ஒருவர், 'இது, வெற்றிகரமா செயல்பட்டா, மிகச் சிறப்பாக செயல்படும் ஸ்காட்லாந்து போலீசாரை மிஞ்சிடுவோம்...' எனக் கூற, மற்றவர்கள் ஆமோதித்தனர்.
'சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போட்டது யாரு?'

திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல், திருச்சி, தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. மாநில இளைஞரணி செயலர் உதயநிதி, நேர்காணல் நடத்தினார். நிருபர்களிடம் அவர், 'உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும், தி.மு.க., வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலை தடுக்க வேண்டும் என, நாங்கள் நினைக்கவில்லை. அதை, முறைப்படி நடத்துங்கள் என்று தான் கேட்கிறோம்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'அப்ப... சுப்ரீம் கோர்ட்ல போட்ட கேசெல்லாம் யாரோடது... கேஸ்ல தோத்துட்டீங்கன்னா, 'எனக்கும், அந்த கேசுக்கும் சம்பந்தம் இல்லே'ன்னு உங்கப்பா சொல்லிடுவாரோ...' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajprince - dammam,சவுதி அரேபியா
01-டிச-201921:12:39 IST Report Abuse
rajprince மாபெரும் தலைவர் புகழேந்தி,அவர் அரசியல்விட்டு போனால் நாடு தாங்காது,மக்கள் தான் தடுத்து நிறுத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X