அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலுடன் கூட்டணி வேண்டாம்: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்ப்பு

Updated : டிச 02, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
'நடிகர் கமலுடன் கூட்டணி வேண்டாம்' என, உலக நாடுகளில் வசிக்கும் ரஜினி ரசிகர்கள், 'இ - மெயில்' வாயிலாக, ரஜினியிடம் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை தனிமைப்படுத்த, சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அதேபோல, தமிழகத்தில், பா.ஜ.,வை தனிமைப்படுத்த, ரஜினியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, காங்கிரஸ் டில்லி மேலிடத்திடம், தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள்
 கமல், கூட்டணி,வேண்டாம், ரஜினியிடம், ரசிகர்கள் எதிர்ப்பு,நண்பர், இ - மெயில்

'நடிகர் கமலுடன் கூட்டணி வேண்டாம்' என, உலக நாடுகளில் வசிக்கும் ரஜினி ரசிகர்கள், 'இ - மெயில்' வாயிலாக, ரஜினியிடம் தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை தனிமைப்படுத்த, சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அதேபோல, தமிழகத்தில், பா.ஜ.,வை தனிமைப்படுத்த, ரஜினியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, காங்கிரஸ் டில்லி மேலிடத்திடம், தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் வலியுறுத்தியுள்ளன.


இ - மெயில்

லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சி, 3.7 சதவீத ஓட்டுகளை பெற்றது. இந்நிலையில், '2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திப்பேன்' என, நடிகர் ரஜினி ஏற்கனவே அறிவித்து விட்டார். நடிகர் கமல், 'அவசியம் வந்தால், ரஜினியுடன் சேர்ந்து பயணிப்போம்' என்றார். அதேபோல், நடிகர் ரஜினி, 'மக்களுடைய நலனுக்காக, நானும் கமலும், நிச்சயமாக இணைவோம்' என்றார். இச்சூழலில், 'கமலுடன், கைகோர்க்க வேண்டாம்' என, ரஜினிக்கு, அவருடைய வெளி மாநில ரசிகர்கள் மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் ரசிகர்கள், இ - மெயில் வாயிலாக, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பக்கம், மஹாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.,வை தனிமைப்படுத்துவதற்கு, சிவசேனா கட்சியை, கொள்கையை புறந்தள்ளி, காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. அதேபோல, தமிழகத்தில், பா.ஜ.,வை தனிமைப்படுத்த, நடிகர் ரஜினியை ஆதரிக்க வேண்டும் என, காங்கிரஸ் டில்லி மேலிடத்திடம், தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து, ரஜினி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், ரஜினி - கமல் ரசிகர்கள், எதிரும் புதிருமாகவே செயல்பட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர்., மறைந்த பின், ஜானகி தலைமையிலான, அ.தி.மு.க.,வும், சிவாஜி தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணியும் கூட்டணி அமைத்தன. கடந்த, 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், அக்கூட்டணி படுதோல்வி அடைந்தது.

அதேபோல, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி, எப்படி பொருந்தா கூட்டணியாக அமைந்ததோ, அதேபோலவே, ரஜினி - கமல் கூட்டணியும் அமையும். வலியுறுத்தல்எனவே, கமலுடன் கூட்டணி வேண்டாம் என, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மற்றும் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேஷியா போன்ற உலக நாடுகளில் வசிக்கிற ரஜினி ரசிகர்கள், ரஜினிக்கு, இ - மெயில் வாயிலாக, எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.

மேலும், ரஜினியின், 43 ஆண்டு கால நண்பர் என்ற அடிப்படையில், கமலுக்கு, 15 சட்டசபை தொகுதிகளை வேண்டுமானால் வழங்கலாம். அவ்வளவு தான், அக்கட்சிக்கு தகுதி என, அக்கடிதங்களில் குறிப்பிட்டு உள்ளனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர் ஒருவரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல நடிகை ஒருவரும், 'ரஜினியுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளனர். தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தான், அக்கூட்டணியால், 40 சதவீதம் ஓட்டுக்களை பெற முடிகிறது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றால், தி.மு.க.,வுக்கு, 28 சதவீதம் ஓட்டுகள் தான் கிடைக்கும்.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை தனிமைப்படுத்தி, சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்தது. அதேபோல,தமிழகத்தில் பா.ஜ.,வை தனிமைப்படுத்த, ரஜினியுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் முன்வர வேண்டும். பா.ஜ., வுடன் ரஜினி கூட்டணி அமைத்தால், தமிழகத்தில், பா.ஜ., - ரஜினி கட்சி கூட்டணி ஆட்சி அமைந்து விடும். எனவே, அக்கூட்டணி அமைவதை தடுக்க வேண்டுமானால், ரஜினியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என, டில்லி மேலிடத்திடம், தமிழக காங்., கோஷ்டிகள் தெரிவித்துள்ளன.


படம் ஓடாது!

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை:ரஜினி - கமல் இணைவதால், அரசியலில் பெருமாற்றம் வரும் என, சிலர் தெரிவிக்கின்றனர். அவர்கள் இணைந்து நடித்து, படம் எடுத்தால் கூட ஓடுமா என்பது, சந்தேகம் தான். அரசியல் என்பது, சினிமா போல், ஐந்து பாட்டும், பத்து சண்டை காட்சிகளும் வைத்து விட்டால் வெற்றி பெறலாம் என, கருதக் கூடாது. அரசியல், இரண்டரை மணி நேரம் ஓடும் படம் அல்ல; நெருப்பாற்றலை நீந்தி கரை சேர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-201915:37:27 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) ரஜினி அவர்களின் தேர்தல் அறிக்கைகள் அவருக்கு வெற்றிக்கனியை பரிசாக கொடுக்கும்.
Rate this:
Cancel
Musthafa - Cuddalore,இந்தியா
01-டிச-201921:40:47 IST Report Abuse
Musthafa கூட்டணி தேர்தலுக்கு பின்னர் ஏற்படுத்தி ஆட்சி அமைக்கலாம், யார் எந்த கட்சி எப்படிவரும் என்பது யாருக்குமே புரியாத புதிர்
Rate this:
Cancel
prabhakar - noida,இந்தியா
01-டிச-201917:38:16 IST Report Abuse
prabhakar They are scams Rajini sir... Don't belive that...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X