அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ., தலைவர் யார்? இம்மாதம் அறிவிக்க முடிவு

Updated : டிச 02, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (27)
Advertisement
 தமிழகம், பா.ஜ., தலைவர், தமிழிசை,60 மாவட்டங்கள்,எதிர்பார்ப்பு

தமிழக, பா.ஜ., தலைவர் யார் என்பது, இம்மாத மத்தியில் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழக, பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, செப்டம்பர் மாதம், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதில், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. மாநில தலைவர் பதவியை பிடிக்க, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் முருகானந்தம், மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் முயற்சிக்கின்றனர்.

ஆனால், தேசிய தலைமை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சி அமைப்பு தேர்தல் முடிந்த பின், மாநில தலைவர் நியமிக்கப்படுவார் எனக் கூறியது. தமிழகத்தில், 66 ஆயிரம் கிளைகளுக்கும், 1,150 மண்டலத்திற்கும், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


கோரிக்கை

கட்சி செயல்பாட்டிற்காக, 60 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகிகள் தேர்தல், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு, டிசம்பர் முதல் வாரத்திற்குள், தேர்தலை நடத்தி முடிக்க, கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் முடிந்ததும், மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். எனவே, டிசம்பர் இரண்டாவது வாரத்தில், மாநில தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால், கூட்டணி கட்சியுடன் பேச்சு நடத்த வேண்டி வரும். எனவே, அதற்கு முன்னதாக, மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என்பது, கட்சியினர் கோரிக்கையாக உள்ளது.தற்போது கட்சியில், நிர்வாகிகள் அனைவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.ஒருவரை ஒருவர் மதிப்பதில்லை. தங்களை வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்டும் நிர்வாகிகள், கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை.


எதிர்பார்ப்பு

இதன் காரணமாகவே, நாடு முழுவதும், பா.ஜ., பெரும் வெற்றியை பெற்றபோதும், தமிழகத்தில் காலுான்ற முடியாமல், தவித்து வருகிறது. கோஷ்டிகளில் சிக்காமல், அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய நபரை, மாநில தலைவராக நியமிக்க வேண்டும் என்பது, கட்சியினர் எதிர்பார்ப்பாக உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
02-டிச-201916:48:41 IST Report Abuse
oce உன்னை போட்டால் கட்சியை வளர்ப்பியா ஜெய்ஹிந்த். எச்.ராஜா தமிழக பா.ஜ.க தலைவர். டிம்கா ஆட்டம் காணும்.
Rate this:
Share this comment
Cancel
ALL INDIAN BJP - singapore,சிங்கப்பூர்
02-டிச-201911:09:33 IST Report Abuse
ALL INDIAN BJP எங்கள் கட்சியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் உனது திருட்டு திமுகவை எப்படி வளர்ப்பது என்று வேலைய பாரு பாவம் இந்த சுடலை எப்பப்பாரு அடுத்த ஆட்சி நாங்கதான் என்று கனவில் மிதக்கின்றான்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
01-டிச-201922:10:50 IST Report Abuse
Sridhar Rengarajan ஒன்னு வாய்க்கொழுப்பு, இன்னொன்னு விளக்கெண்ணெய், இன்னொன்னு வெத்துவேட்டு. வழக்கறிஞர் வானதி சீனிவாசன் ஈஸ் த பெஸ்ட் சாய்ஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X