பொது செய்தி

இந்தியா

இன்று டில்லி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாச்சார மையம் கிரஹப்பிரவேசம்

Updated : டிச 01, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (10)
Advertisement
டில்லி, ஸ்ரீ காஞ்சி காமகோடி, பீட கலாச்சார மையம், கிரஹப்பிரவேசம்

டில்லி ஆர். கே. புரத்தில் புதிதாக நிர்மாணிக்கபட்டுள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாச்சார மையம் வேதம், கல்வி மற்றும் வைத்தியம் மூலமாக சமுக நற்பணி ஆற்றவுள்ளது.




இந்த புது மையத்தின் கிரஹப்பிரவேச விழாஇன்று (டிச., 1-ம் தேதி), ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆர்.கே புரம் , செக்டார் 1-ல் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.




கிரஹப்பிரவேச விழா நடைபெறும் இடத்தை மூத்த பாரதிய ஜனதா தலைவரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் முரளி மனோகர் ஜோஷியும், தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் லட்சுமிபதியும் பார்வையிட்டனர்






இந்நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காணொளி நேரலையில் அனுகிரஹ பாஷாணம் வழங்க உள்ளார்கள் .

நிகழ்ச்சி விபரம் பின்வருமாறு :
காலை 7. 00 மணி முதல் 8. 00 மணி வரை
மங்கள வாத்தியம்
ஸ்வஸ்திவசனம்
கோ பூஜை
கணபதி ஹோமம்
நவக்கிரஹ ஹோமம்
வாஸ்து ஹோமம்
பூரணாதி
8. 00 மணி முதல் 10 மணி வரை
சண்டி ஹோமம்
பூரணாதி
இதன் பிறகு கலாச்சார நிகழ்ச்சிகள், குத்து விளக்கேற்றல் மற்றும் சில முக்கிய வைபவங்களுடன் , ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரஹ பாஷாணத்துடன் 12.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுபெறும். இதை தொடர்ந்து மகா பிரசாதம் வழங்கப்படும்.

ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திர், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாச்சார மையத்துடன் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் அனைத்து ஆன்மீக அன்பர்களும் கலந்து கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
01-டிச-201915:35:52 IST Report Abuse
konanki எக்கி புயல் கடுமையாக தாக்கிய தஞ்சை பகுதி 5 கிராமங்களை காஞ்சி மடம் தத்தெடுத்து அந்த மக்களுக்கு எல்லா வித உதவியும் செய்து கொடுத்தது. சென்னை யில் எல்லா சமூக ஏழைகளும் பயன்படும் வகையில் சங்கரா மருத்துவ மனைகளில் தரமான மருத்துவம் மிக குறைந்த கட்டணத்தில் தரப்படுகிறது.நண்பர் சேனர் உண்மை தெரியாமல் துவேஷம் கொண்டு எழுதுவது விஷயம் தெரியததால்
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-டிச-201915:07:33 IST Report Abuse
Vena Suna அவர்கள் பல சேவைகளை செய்கின்றார்கள் பாராட்டாவிட்டால் பரவாயில்லை. தூற்றாமலும், பொய் வதந்தி செய்யாமலும் சிலர் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
01-டிச-201908:33:51 IST Report Abuse
GMM கலாச்சார மையம் வேதம், கல்வி பயில ஒரு சிறந்த சேவை நிலையம். இந்தியா முழுவதும் இணைக்க ஒரு மொழி தேர்வு அவசியம். ஒரே பழக்கம், தொழில் சார்ந்த இந்து சமூக அமைப்பை, கலாச்சாரம் பேண இந்தியா(நேபாளம்) முழுவதும் இணைக்கபட வேண்டும். குழந்தைகளுக்கு ஆன்மிகம், கலாசாரம் போதிக்க ஏற்பாடு. தனிமையில் வாழும் முதியோருக்கு நல இல்லம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X