இதே நாளில் அன்று: டிசம்பர் 1, 1988உலக எய்ட்ஸ் தினம்: | Dinamalar

இதே நாளில் அன்று: டிசம்பர் 1, 1988உலக எய்ட்ஸ் தினம்:

Added : நவ 30, 2019
Share

உலகம் முழுவதிலும், 1981 முதல், 2007- வரை, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் எண்ணிக்கை, 2.5 கோடி. மனித வரலாற்றிலேயே, மிகக் கொடூரமான தொற்றுநோயாக இது கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில், ஜெனீவாவில் அமைந்துள்ள, உலக சுகாதார அமைப்பில், எய்ட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின், பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் ஆகிய இருவரால், 1987 ஆகஸ்ட்டில் உருவாக்கப்பட்டதே, உலக எய்ட்ஸ் தினம். 1988 முதல், டிசம்பர் 1ம் தேதி, உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பாதுகாப்பு இல்லாமல் உடலுறவில் ஈடுபடுவதாலும், ரத்தம் ஏற்றிக் கொள்வதாலும், இந்நோய் ஏற்படுகிறது. 'எய்ட்ஸ்' மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை, நோக்கமாக கொண்டது இந்நாள்.

'எய்ட்ஸ்' பரவாமல் தடுக்க, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்க, பாதிக்கப்பட்டோருக்கு, பரிவு காட்ட, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X