கத்திமுனையில் 8 வயது சிறுமி பலாத்காரம்

Added : நவ 30, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், 8 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கத்தி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அடித்து துன்புறுத்தப்பட்டார்.ராஜ்கோட்டில் உள்ள பூங்கா ஒன்றில் தாயாருடன் தூங்கி கொண்டிருந்த அந்த சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்று, பலாத்காரம் செய்த பின்னர், புதரில் வீசிவிட்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், சிறுமி பலாத்காரம்

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், 8 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கத்தி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அடித்து துன்புறுத்தப்பட்டார்.

ராஜ்கோட்டில் உள்ள பூங்கா ஒன்றில் தாயாருடன் தூங்கி கொண்டிருந்த அந்த சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்று, பலாத்காரம் செய்த பின்னர், புதரில் வீசிவிட்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதையும், அடித்து துன்புறுத்தியதையும் டாக்டர்கள் உறுதி செய்தனர். கூலி தொழிலாளியான அந்த சிறுமியின் தாயார், போலீசில் புகார் அளித்துள்ளார். கடத்தல், பலாத்காரம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
01-டிச-201910:32:10 IST Report Abuse
அம்பி ஐயர் நாடு எங்கே போகிறது....???
Rate this:
Cancel
Satheeshkumar - Reading,யுனைடெட் கிங்டம்
01-டிச-201900:43:25 IST Report Abuse
Satheeshkumar சுண்ணாம்பு வெச்சு விடணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X