பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகம் கட்ட நிதி

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை:புதிய கலெக்டர் அலுவலகங்கள் கட்டுமானப் பணிக்கு, அரசிடம் நிதியை எதிர்பார்த்து, பொதுப்பணி துறையினர் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே, 32 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்ட தலைநகரங்களில், கலெக்டர் அலுவலகங்கள் பொதுப்பணி துறையால் கட்டித் தரப்பட்டுஉள்ளன. தற்போது, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், செங்கல்பட்டு என, ஐந்து புதிய மாவட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. புதிய மாவட்ட தலைநகரங்களில், கலெக்டர் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான நிலத்தையும் அரசு தயார்படுத்தி உள்ளது. அரசு உத்தரவின்படி, கட்டட வடிவமைப்பு பணிகளை, பொதுப்பணி துறையினர் செய்து வருகின்றனர்.

தன் ஆட்சியில் உதயமான மாவட்டங்கள் என்பதை நினைவுகூரும் வகையில், ஒரே மாதிரி கட்டட வடிவமைப்புகளை செய்ய, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டிருந்தார். இப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. அதேநேரத்தில், கலெக்டர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு, அரசு நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடவில்லை. எனவே, கட்டுமான பணிக்கான அடுத்தகட்ட ஏற்பாடுகளை செய்ய முடியாமல், நிதியை எதிர்பார்த்து, பொதுப்பணி துறையினர் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X