பொது செய்தி

தமிழ்நாடு

தமிழில் ஜே.இ.இ., தேர்வு?

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை: ஜே.இ.இ., நுழைவு தேர்வை, தமிழ், தெலுங்கு உள்பட, 11 மொழிகளில் நடத்த, தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,களில், மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில், ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படுகிறது. 2018 முதல், குஜராத்தியிலும் தேர்வு நடக்கிறது. இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.இது குறித்து, தேசிய தேர்வு முகமை ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த கல்வி ஆண்டு முதல், தமிழ், தெலுங்கு உள்பட, 11 மொழிகளில் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X