சோனியா பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் வேண்டாம்: சிவசேனா

Updated : டிச 01, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை:காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை, மத்திய அரசு வாபஸ் பெற்றதற்கு, சிவசேனா கவலை தெரிவித்து உள்ளது. மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்., ஆதரவுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், சிவசேனா கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்:பொது
 சோனியா, பாதுகாப்பு,  அரசியல் வேண்டாம், சிவசேனா,வாபஸ் ,கவலை

மும்பை:காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை, மத்திய அரசு வாபஸ் பெற்றதற்கு, சிவசேனா கவலை தெரிவித்து உள்ளது.

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்., ஆதரவுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், சிவசேனா கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்:பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோர், எந்தவிதமான பயமும், அச்சுறுத்தலும் இன்றி செயல்பட வேண்டும். அதற்கான சூழலை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

அச்சுறுத்தல் இல்லை என்றால், அவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள், ஆளும் கட்சி தலைவர்களுக்கு, இன்னும், எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு துளைக்காத வாகனங்களையும், இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப் பட்டது, பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மிகவும் கவலை அளிக்கிறது.இலங்கை பிரச்னைக்காகவே, ராஜிவ் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் கூட, இலங்கையில் நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்ததை மறந்து விடக் கூடாது.

சோனியா குடும்பத்தினருடன், மத்திய அரசுக்கு, அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த குடும்பத்தினரின் பாதுகாப்பு விஷயத்தில், எந்தவிதமான அரசியல் விளையாட்டும் வேண்டாம். இவ்வாறு, அதில் எழுதப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayen.R -  ( Posted via: Dinamalar Android App )
01-டிச-201920:12:13 IST Report Abuse
ayen.R மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய மாநில அரசின் கடமை . அதற்கான நடவடிக்கை எடுங்கள்.
Rate this:
Cancel
01-டிச-201918:58:32 IST Report Abuse
சோனி இதுக்கு மொத்த சிவசேனே கட்சிக்காரணுக தொங்கலாம்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
01-டிச-201918:16:25 IST Report Abuse
sankar ஜாலராவில் கருணாநிதியை மிஞ்சிவிட்டாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X